கோட் படத்தில் விஜயகாந்தின் மாஸ்… சோஷியல் மீடியாவில் லீக் செய்த தளபதி ஃபேன்ஸ்

கோட் படத்தில் விஜயகாந்தின் மாஸ்… சோஷியல் மீடியாவில் லீக் செய்த தளபதி ஃபேன்ஸ்
  • PublishedSeptember 5, 2024

ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படத்தின் ஆரம்ப காட்சியிலேயே விஜயகாந்தின் சரவெடி என்ட்ரி இருக்கும் என ஏற்கனவே தகவல்கள் கசிந்த நிலையில், தற்போது விஜயகாந்தின் அதிரடி என்ட்ரி மற்றும் கோட் படத்தில் ஏஐ மூலமாக கேப்டனை வெங்கட் பிரபு எப்படி கொண்டு வந்திருக்கிறார் என்கிற காட்சிகளை வீடியோவாகவே எடுத்து கேரளாவில் உள்ள தளபதி ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் போட ஆரம்பித்து விட்டனர்.

கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் ஜிஎஸ்டி எல்லாம் சேர்த்து சுமார் 400 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தளபதி விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் சொன்ன மாதிரியே எந்தவொரு தடையும் இல்லாமல் செப்டம்பர் 5ம் தேதி வெளியானது.

ஆடியோ லாஞ்ச் எல்லாம் வைத்து விஜய் பேசும் பேச்சை யாருக்கு எதிராகவாவது திருப்பி விடுவார்கள் என்பதற்காகவோ, கடந்த முறை அனுமதி கிடைக்காததை போல செய்து விடுவார்கள் என்பதற்காகவோ விஜய் இந்த முறை எந்தவொரு புரமோஷனையும் படத்துக்காக செய்யவில்லை.

மறைந்த கேப்டன் விஜயகாந்தை மீண்டும் திரையில் ரசிகர்கள் காண்பதற்காக விஜய் நடித்துள்ள கோட் படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலமாக அவரை வெங்கட் பிரபு தனது கிரியேட்டிவிட்டி மூலம் கொண்டு வந்திருக்கிறார்.

அர்ச்சனா கல்பாத்தி அதற்காக பல கோடிகளை செலவு செய்து ஏஐ மூலம் விஜயகாந்தை உருவாக்கியுள்ள நிலையில், முதல் சீனிலேயே விஜயகாந்த் வரும் காட்சி படத்தில் இடம்பெற்றுள்ளது.

சோஷியல் மீடியாவில் டிரெண்டிங்கில் #GOAT இருந்து வரும் நிலையில், முதல் காட்சியிலேயே கேப்டன் விஜயகாந்த் கோட் சூட்டில் வரும் காட்சியை ஆன்லைனில் லீக் செய்து விட்டனர்.

படத்தின் துவக்கத்திலேயே கேப்டன் விஜயகாந்தின் என்ட்ரி செம ட்விஸ்ட்டான சர்ப்ரைஸ் உடன் வரும் நிலையில், ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்த காட்சிகளும் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *