மீண்டும் நடிக்க வருகின்றார் விஜயகாந்த்… ஆவியா? பேயா? நீங்களே பாருங்க…

மீண்டும் நடிக்க வருகின்றார் விஜயகாந்த்… ஆவியா? பேயா? நீங்களே பாருங்க…
  • PublishedApril 17, 2024

நடிகரும், தேமுதிக., தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த டிசம்பர் இறுதியில் மரணமடைந்தார். அவர் தனது மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்த சகாப்தம் என்கிற படத்தில் தான் கடைசியாக நடித்தார்.

இந்த நிலையில் ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் (ஏஐ) எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலமாக மீண்டும் விஜயகாந்த்தை திரையில் கொண்டு வர இருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.

விஜய்யை வைத்து தற்போது கோட் என்கிற படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபு ஏற்கனவே அதில் பிரபுதேவா, பிரசாந்த், மோகன் என விஜய்யுடன் ஒரு வித்தியாசமான நட்சத்திர கூட்டணியை இணைத்து உருவாக்கி உள்ளார்.

இந்த நிலையில் தான் விஜயகாந்த்தையும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தோன்ற வைக்க இருக்கிறார். இது குறித்த தகவல் ஏற்கனவே கசிந்த நிலையில் சமீபத்தில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவும் இதை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது,

“சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு பலமுறை எங்களது வீட்டிற்கு வந்து சண்முக பாண்டியனை சந்தித்து விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் நடிக்க வைப்பது குறித்து பேச வேண்டும் என்பதற்காக என்னை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். பிரச்சாரத்திற்கு இடையே ஒருநாள் சென்னை வந்தபோது அவர் என்னை சந்தித்து முழு விவரங்களையும் சொன்னார். விஜய், வெங்கட் பிரபு இருவரையுமே சிறு வயதில் இருந்தே நான் பார்த்து வருகிறேன். விஜயகாந்த் இருந்தால் எப்போதுமே விஜய்க்கு நோ சொல்ல மாட்டார். தேர்தல் முடிந்ததும் விஜய்யும் என்னை சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்பிறகு இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *