விஜய்யின் GOAT படத்தில் விஜயகாந்த்… வெளியானது சீக்ரெட்

விஜய்யின் GOAT படத்தில் விஜயகாந்த்… வெளியானது சீக்ரெட்
  • PublishedFebruary 12, 2024

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தில் விஜய்யுடன் விஜயகாந்தும் நடித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

நடிகர் விஜய்யின் 68-வது திரைப்படம் கோட். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி என்கிற புதுமுக நடிகை நடிக்கிறார். மேலும் சினேகா, லைலா, வைபவ், நிதின் சத்யா, பிரேம்ஜி, மோகன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது.

இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

கோட் படத்தில் விஜய்யின் இரட்டை கதாபாத்திரம் மட்டுமின்றி பல்வேறு சர்ப்ரைஸுகளும் ஒளிந்திருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒரு சர்ப்ரைஸ் தான் தற்போது கசிந்துள்ளது.

அதன்படி கோட் படத்தில் கேப்டன் விஜயகாந்தும் நடித்துள்ளதாக ஒரு ஆச்சர்ய தகவல் ஒன்று லீக் ஆகி உள்ளது.

அதன்படி அவரின் கேரக்டரை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கி இருப்பதாகவும், விஜய்யும் அவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகளும் படத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்காக கேப்டன் விஜயாகந்தின் குடும்பத்தினரிடம் அனுமதி வாங்கி தான் படக்குடு இதற்கான வேலைகளை செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் விஜய்யும், விஜயகாந்தும் கடைசியாக செந்தூரப்பாண்டி திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *