நாளை ரசிகர்களுக்கு விருந்தாகும் விஜய்யின் “சின்ன சின்ன கண்கள்..” பாடல்

நாளை ரசிகர்களுக்கு விருந்தாகும் விஜய்யின் “சின்ன சின்ன கண்கள்..” பாடல்
  • PublishedJune 21, 2024

நடிகர் விஜய் அப்பா மற்றும் மகன் என இருவேறு கெட்டப்புகளில் நடித்துள்ள படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம். இந்தப்படம் சயின்ஸ் பிக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

படத்தின் போஸ்டர்கள் முன்னதாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் ஃபர்ஸ்ட் சிங்கிளும் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

யுவன் சங்கர் ராஜா கோட் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் நாளைய தினம் விஜய்யின் 50வது பிறந்தநாளையொட்டி படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகவுள்ளதாக படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்டேட் தெரிவித்துள்ளார்.

ஒரு சின்ன ட்ரீட் என அவர் போஸ்டருடன் இந்த அறிவிப்பை மேற்கொண்டுள்ளார். இந்த போஸ்டரில் குடை பிடித்தபடி நடிகர் விஜய், தன்னுடைய மனைவி மற்றும் மகனுடன் ஷாப்பிங் பேக்குகளுடன் காணப்படுவதாக அமைந்துள்ளது. இந்த போஸ்டரை பார்க்கும்போது அப்பா விஜய்யின் பாடலாக இந்தப் பாடல் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சின்ன சின்ன கண்கள் என இந்தப் பாடல் நாளைய தினம் வெளியாகவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *