போஸ்டர் அடி.. அண்ணன் ரெடி… தவெக மாநில மாநாடு எங்க தெரியுமா?

போஸ்டர் அடி.. அண்ணன் ரெடி… தவெக மாநில மாநாடு எங்க தெரியுமா?
  • PublishedJuly 31, 2024

நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் தனது அரசியல் பயணத்திற்கு தயாராகி வருகிறார். கட்சியின் முதல் மாநாட்டில் கட்சியின் கொடி, கொள்கைகள் உள்ளிட்டவை வெளியாக உள்ளது.

இந்த நிலையில் அவரது கட்சியின் முதல் மாநாடு எங்கு நடைபெற இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்கள் இடையே எழுந்திருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக நிர்வாகிகளிடம் பேசிய போது பல முக்கிய தகவல்கள் கிடைத்தன.

இந்த நிலையில் மதுரை அல்லது திருச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாடு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் மாநில மாநாட்டை விஜய் நவம்பர் மாதத்தில் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் சென்ற கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சேலத்தில் சில பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். இதன் மூலம் சேலத்தில் தான் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழக முதல் மாநில மாநாடு நடைபெற இருப்பதாகவும் அதற்காகவே அவர் ஆய்வு மேற்கொண்டார் எனவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் அப்படியெல்லாம் இல்லை நடிகர் விஜய் திருச்சியில் தான் தனது முதல் அரசியல் மாநாட்டை நடத்தப் போகிறார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

அதே நேரத்தில் மதுரையில் மாநாட்டை நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு விஜய் கூறியுள்ளாராம். இதற்கு என்ன காரணம் என தென் மாவட்ட நிர்வாகிகளிடம் விசாரித்த போது,

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த பலரும் மதுரையில் இருந்தே தங்கள் பயணத்தை தொடங்கி இருக்கின்றனர். லேட்டஸ்ட் வரவாக அரசியலில் குதித்த நடிகர் கமலஹாசனும், அதற்கு முன்னால் நடிகரும் நடிகர் சங்க தலைவராக இருந்து எதிர்க்கட்சித் தலைவர் பதவி வரை சென்ற விஜயகாந்த் மதுரையில் தான் தனது முதல் மாநில மாநாட்டை நடத்தி காட்டினார்.

மதுரையும் தமிழகத்தின் மையப்பகுதியில் இருப்பதால் விமானம், ரயில், சாலை போக்குவரத்தாக ரசிகர்களும் நிர்வாகிகளும் எளிதாக வரமுடியும்.

எனவே திருச்சி அல்லது மதுரை தான் நடிகர் விஜயின் முதல் மாநில மாநாடு பட்டியல் நடக்கும் இடங்களில் முதல் இரு இடங்களில் இருக்கிறது. இவற்றில் ஏதாவது ஒன்றில் மாநாடு நடக்கும் எனவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கின்றனர் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *