விஜய்யின் விரல் துண்டானது… GOAT படத்திலிருந்து லீக்கான அதிர்ச்சி போட்டோ

விஜய்யின் விரல் துண்டானது… GOAT படத்திலிருந்து லீக்கான அதிர்ச்சி போட்டோ
  • PublishedFebruary 11, 2024

விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகவுள்ளதாம்.

இந்நிலையில், GOAT படத்தில் விஜய்யின் விரல் துண்டாகும் காட்சி இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.

விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் GOAT இந்தாண்டு ரிலீஸாகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய்யுடன் பெரிய நட்சத்திரக் கூட்டணியே நடித்து வருகிறது. மைக் மோகன், டாப் ஸ்டார் பிரசாந்த், மாஸ்டர் பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி, ஜெயராம், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

பவதாரிணி மறைவு காரணமாக கோட் படப்பிடிப்புக்கு பிரேக் விடப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் படப்பிடிப்பை தொடங்கிய வெங்கட் பிரபு விஜய் நடிக்கும் காட்சிகளை படமாக்கி வருகிறாராம். ஏற்கனவே இந்தப் படத்திற்காக 5 ஆக்‌ஷன் காட்சிகள் ஷூட்டிங் செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு பைட் சீன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறதாம்.

இதற்கான ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதாவது இப்போது எடுக்கப்படும் சண்டைக் காட்சியில் விஜய்யின் விரல் துண்டாவதைப் போல ஒரு சீன் உள்ளதாம்.

இந்தக் காட்சி தத்ரூபமாக வர வேண்டும் என்பதால் prosthetics technology-ஐ பயன்படுத்தியுள்ளாராம் வெங்கட் பிரபு.

இது ஏற்கனவே கமல் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த டெக்னாலஜியில் விஜய்யின் விரல் துண்டாவதை போல எடுக்கப்பட்ட போட்டோ டிவிட்டரில் வைரலாகி வருகிறது.

போரில் நடக்கும் சண்டைக் காட்சியில் விஜய்யின் விரல் துண்டாவதை போல ஷூட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சீனை திரையில் பார்க்கும் போது ரசிகர்களே இது உண்மை என நம்பிவிடுவார்கள் என படக்குழு தரப்பில் இருந்து சொல்லப்படுகிறது.

இதனிடையே கோட் படத்தின் முதல் பாடலை வெளியிடவும் வெங்கட் பிரபு முடிவு செய்துவிட்டாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *