விஜய்யின் “ஜனநாயகன்” படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ் நியுஸ்..

விஜய்யின் “ஜனநாயகன்” படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ் நியுஸ்..
  • PublishedNovember 6, 2025

தளபதி விஜய் நடிக்கும் இறுதி படமான ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதன்படி ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் நாளை மறுதினம் வெளியாகவுள்ளது. இதை தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்சன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இதேவேளை, பாடலின் ப்ரொமோ வீடியோ நாளை வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்தை எச்.வினோத் இயக்குகிறார். படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

படம் திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்சன்ஸ் அறிவித்திருக்கிறது.

இந்நிலையில் அனிருத் இசையில் ஜனநாயகன் படத்திலிருந்து முதல் பாடல் நாளை மறுதினம் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *