விஜய்யின் கடைசி பட டைட்டில் இதுவா? இது அதுல்ல…
விஜய் அரசியலுக்கு வந்தது ரசிகர்களுக்கு சந்தோஷம்தான். ஆனாலும் சினிமாவில் அவர் இனிமேல் நடிக்க மாட்டார் என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு ஜரூராக நடந்து வருகிறது. இந்த வருட இறுதியில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் படத்தின் தலைப்பு என்ன என்ற தகவல் கசிந்துள்ளது. அதன்படி படத்திற்கு அரசியல் சம்பந்தமான ஒரு டைட்டில் தான் வைக்க வேண்டும் என்பது விஜயின் ஆசை.
அதை அவர் இயக்குனரிடம் சொல்லி இருக்கிறார். பல பெயர்கள் கலந்தாலோசிக்கப்பட்டிருக்கிறது. அதை அடுத்து தற்போது நாளைய தீர்ப்பு என முடிவாகி இருக்கிறது.
விஜயின் ஹீரோ பயணத்திற்கு ஆரம்பமே இந்த பெயர் தான். அவருடைய முதல் பட பெயர் கடைசி பட பெயராக இருப்பது எமோஷனல் கனெக்சன் ஆக உள்ளது.
அது மட்டும் இன்றி வர இருக்கும் தேர்தலில் வெற்றி நிச்சயம் என விஜய் ஆணித்தரமாக நம்புகிறார். அதை கூறும் வகையில் நாளைய தீர்ப்பு என்ற பெயர் பக்கவாக பொருந்தி இருக்கிறது. ஆனால் இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக வரவில்லை.