விஜய்யின் குட்டி கதை கேட்க தயாரா? வெளியானது மாஸ் அறிவிப்பு

விஜய்யின் குட்டி கதை கேட்க தயாரா? வெளியானது மாஸ் அறிவிப்பு
  • PublishedAugust 5, 2023

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  விஜய் லியோ படத்தில் இணைந்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்து வரும் அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தின் போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகள் தற்போது படுஜோராக நடந்து கொண்டிருக்கிறது. அதே சமயம் படத்திற்கான இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

ஏற்கனவே ஜெயிலர் பட ஆடியோ லான்ச்சின் போது ரஜினி விஜய்யை தான் தாக்கிப் பேசியதாக சொல்லப்பட்டது.

இது விஜய்க்கும் தோன்றியிருந்தால், நிச்சயம் லியோ ஆடியோ லான்ச்சில் அதற்கு பதில் கொடுத்து விடுவார்.

அதன்படி வரும் செப்டம்பர் மாத இறுதியில் லியோ இசை வெளியீட்டு விழாவை நடத்த முடிவெடுத்துள்ளனர்.

வரும் செப்டம்பர் 24ஆம் தேதி லியோ ஆடியோ லான்ச் நடைபெறும் என்பது கன்ஃபார்ம் ஆகிவிட்டது.

ஒவ்வொரு முறையும் விஜய் தனது படத்தின் ஆடியோ லான்ச்சின் போது ரசிகர்களுக்கு குட்டி ஸ்டோரியை சொல்லி அசத்துவார். அந்த வகையில் இந்த முறை ரஜினி சொன்ன காக்கா, பருந்து ஸ்டோரிக்கு பதில் கொடுக்கும் அளவுக்கு விஜய்யின் குட்டி ஸ்டோரி இருக்கும் என்று தளபதி ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

லியோ படத்தின் ஆடியோ லான்ச் செப்டம்பர் 24ஆம் தேதி எங்கு நடக்கப்போகிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தில் விஜய்யுடன் ஹிந்தி, தெலுங்கு போன்ற பிறமொழி பிரபலங்களும் இணைந்து நடிப்பதால் இந்த படம் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *