புதுமுக இயக்குனருடன் இணையும் விக்ரம் : சியான் 63 அப்டேட்

புதுமுக இயக்குனருடன் இணையும்  விக்ரம் : சியான் 63 அப்டேட்
  • PublishedOctober 31, 2025

விக்ரமின் 63 ஆவது படத்தை அறிமுக இயக்குநர் போடி ராஜ்குமார் இயக்கவிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் உத்தியோகப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது

தங்கலான் படத்தைத் தொடர்ந்து விக்ரமின் அடுத்த படத்தை மடோன் அஸ்வின் இயக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது, தொடர்ந்து இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி பின் இந்த இரு படங்களும் கைவிடப்பட்டன.

இப்படியான நிலையில் விக்ரமின் 63ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது

அறிமுக இயக்குநர் போடி ராஜ்குமார் விக்ரமின் 63 ஆவது படத்தை இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

போடி ராஜ்குமார் எந்த இயக்குநரிடமும் உதவியாளராக பணியாற்றியது இல்லை. அவர் 3 குறும்படங்களை இயக்கியுள்ளார். அதில் இரு குறும்படங்கள் விருது பெற்றுள்ளது. விக்ரமுக்கு அவர் சொன்ன கதை பிடித்துபோனதால் அவரை நம்பி இந்த படத்தை இயக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *