அமலாவை துரத்தி, துரத்தி காதலித்த வில்லன் நடிகர்!

அமலாவை துரத்தி, துரத்தி காதலித்த வில்லன் நடிகர்!
  • PublishedApril 5, 2023

90களின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவை தன்னுடைய பேரழகால் சில வருடங்கள் கட்டி வைத்திருந்தவர் தான் நடிகை அமலா. முகத்திற்கு அவ்வளவாக மேக்கப் போடாத நடிகைகளில் இவரும் ஒருவர். இதற்காகவே நிறைய நடிகர்கள் அமலாவை திருமணம் செய்துகொள்ள விரும்பியதாக கூறப்படுகிறது.

அந்தவகையில் நடிகர் ரகுவரன் அமலாவுக்கு ப்ரபோஸ் செய்திருந்தாராம். அதாவது  ரகுவரன் மற்றும் ரோகினியின் காதல், திருமணம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இருவரும் கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.

அதன் பின்னர் 1987 ஆம் ஆண்டு ரகுவரன் மற்றும் அமலா கூட்டுப் புழுக்கள் என்னும் திரைப்படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள். அப்போது ரகுவரனுக்கு அமலாவை ரொம்பவே பிடித்துப் போக தன்னுடைய காதலையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஆனால் அமலா இந்த காதலுக்கு மறுப்பு தெரிவித்து விட்டாராம். இதனால் ரகுவரன் ரொம்பவே மனம் நொந்து போயிருக்கிறார். பின்னாளில் ஒரு பேட்டியில் ரகுவரனே எந்த ஒளிவு மறைவும் இன்றி இதை தெரிவித்து இருக்கிறார். ரகுவரன் மட்டுமல்ல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட அமலாவை காதலித்ததாக அப்போது செய்திகள் வெளியாகின.

ஆனால் அமலா தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது நடிகர் நாகார்ஜுனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *