விஜய் டிவி பிரியங்காவிற்கே டஃப் கொடுக்கும் அனிதா சம்பத்!

விஜய் டிவி பிரியங்காவிற்கே டஃப் கொடுக்கும் அனிதா சம்பத்!
  • PublishedApril 5, 2023

சின்னத்திரை தொகுப்பாளர்கள் என்றதுமே நம் நினைவிற்கு வருவது, டிடி, பிரியங்கா, விஜே ரம்யா தான். தற்போது இவர்களுடைய வரிசையில் செய்தி வாசிப்பாளர் அனித்தா சம்பத்தும் இணைய போகிறார்.

அதாவது விஜய் டீவியில் தற்போது துவங்க இருக்கும் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்ற நிகழ்ச்சியை அனித்தா சம்பத் தான் தொகுத்து வழங்க இருக்கிறாராம்.

மேலும் ‘தமிழ் பேச்சு எங்கள் மூச்சு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் அனிதா சம்பத் தற்போது விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்காவிற்குகே டஃப் கொடுக்கப் போகிறார். இந்த நிகழ்ச்சி மட்டுமல்ல விஜய் டிவியில் இருக்கும் இன்னும் சில நிகழ்ச்சிகளும் அடுத்தடுத்து அனிதா சம்பத் கைவசம் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

முன்பு சன் டிவி, நியூஸ் 7 தமிழ் போன்ற சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய அனிதா சம்பத் அதன் பிறகு சர்கார்,  காப்பான் உள்ளிட்ட படங்களில் நியூஸ் ரீடர் ஆகவே நடித்தார். அதன் பின் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ஒரு போட்டியாளராக பங்கேற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *