வாயை கொடுத்து மாட்டிக் கொண்ட நெல்சன் : உச்சக்கட்ட கோபத்தில் ரஜினி காந்த்!

வாயை கொடுத்து மாட்டிக் கொண்ட நெல்சன் : உச்சக்கட்ட கோபத்தில் ரஜினி காந்த்!
  • PublishedApril 5, 2023

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் நடிக்கும் ஜெய்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

டொக்டர் திரைப்படம் இவருக்கு அமோக வெற்றி வாய்ப்பை கொடுத்தாலும், பீஸ்ட் திரைப்படம் மொக்கை வாங்க வைத்தது.

இதனால் சூப்பர் ஸ்டாரின் ஜெய்லர் படம் அதிக விமர்சனத்தை எதிர்நோக்கியுள்ளது. இதற்கிடையே நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசிய நெல்சன் சூப்பர் ஸ்டாரையே கோபப்படுத்தியிருக்கிறார்.

அதாவது  லோகேஷ் கனகராஜூம், நெல்சனும் ஒரு விழாவில் கலந்து கொண்டனர். அதில் லோகேஷுக்கு ஒரு மரியாதை,  இவருக்கு ஒரு மரியாதை கொடுத்து அவமானப்படுத்தப்பட்டதாக கூறினார். ‘

எனக்கு சினிமாவில் இருக்க ஆசை இல்லை. படங்களை இயக்கவும் ஆசை இல்லை. எனது அப்பா தான் என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்தார். எனக்கு மெடிக்கல் படிக்க வேண்டும் இல்லையென்றால் இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் நான் 80 சதவீத மதிப்பெண் தான் பெற்றேன்.

என் அப்பா என்னை விஷுவல் கம்யூனிகேஷன் படிக்க சொன்னார். நான் முடியாது என்றேன். அதன் பின் நல்ல காலேஜில் இன்ஜினியரிங் கிடைத்தால் படி இல்லையென்றால்இ விஷுவல் கம்யூனிகேஷன் படி. முடியாது என்றால் ஏதாவது மெக்கானிக் செட்டிற்கு வேலைக்கு போ என்று சொல்லிவிட்டார்.

வேறு வழியில்லாமல் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தேன். அது என்ன படிப்பு என்றே தெரியாமல். ஆனாலும் படித்தேன். இரண்டாம் ஆண்டு வரும்பொழுது எனது அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை. இதனால் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த படிப்பை முடித்து தற்போது இந்த இடத்தில் இருக்கிறேன். ஆனால் எனக்கு இதில் விருப்பமில்லை என்று கூறியிருக்கிறிர்.

இப்படிப்பட்ட மனநிலை கொண்டவரான நெல்சனுக்கு தான் ஜெயிலர் படத்தின் வாய்ப்பை கொடுத்திருக்கிறோமா என்று ரஜினி தற்போது உச்சகட்ட கோபத்தில் இருக்கிறாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *