மார்க் ஆண்டனி 4 நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் விநாயாகர் சதுர்த்தி விடுமுறையுடன் அதிகபட்ச வசூல் வேட்டையை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதல் நாளே தமிழ்நாட்டில் 8 கோடி ரூபாய் வசூலையும் உலகளவில் 12 கோடி ரூபாய் வசூலையும் ஈட்டிய மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் முதல் ஏகப்பட்ட விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை வழங்க ஆண்டனி திரைப்படம் மாஸ் காட்டி வருகிறது.
கடைசி வரை நடிப்பு அரக்கனுக்கு டஃப் கொடுக்க கடும் உழைப்பை விஷால் போட்டிருப்பதும் அதற்கான ஸ்கோப்பை இயக்குநர் கொடுத்திருப்பதும் தான் இந்த படத்தின் வெற்றிக்கு காரணம்.
விஷால் நடித்த திரைப்படங்கள் இதுவரை 100 கோடி வசூலை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன் எல்லாம் விஷாலுக்கு பின்னர் வந்து அசால்ட்டா பல செஞ்சுரி அடித்த நிலையில், மார்க் ஆண்டனி விஷாலையும் 100 கோடி கிளப் ஹீரோவாக மாற்றும் என எதிர்பார்க்கின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை வந்ததை போலவே விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாளான திங்கட்கிழமையும் மக்கள் மார்க் ஆண்டனி திரையிட்ட தியேட்டர்களுக்கு படையெடுத்த நிலையில், 4 நாட்களில் 50 கோடி வசூல் வேட்டையை விஷால் படம் நடத்தியுள்ளது என்கின்றனர். 55 கோடி ரூபாய் வசூல் இதுவரை வந்துள்ளதாகவும் 2வது வார முடிவில் கண்டிப்பாக 100 கோடி வசூலை இந்த படம் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#VinayagarChaturthi wishes from Team #MarkAntony #HappyVinayagarChaturthi #WorldOfMarkAntony pic.twitter.com/I8gFvEq6Qu
— Vishal (@VishalKOfficial) September 18, 2023