“இதுக்கு ஸ்ரீரெட்டியை தடவி இருப்பேன்….” கொச்சையாக பேசி சிக்கலில் சிக்கிய விஷால்

“இதுக்கு ஸ்ரீரெட்டியை தடவி இருப்பேன்….” கொச்சையாக பேசி சிக்கலில் சிக்கிய விஷால்
  • PublishedNovember 30, 2023

நடிகர் விஷால், பல பேர் முன்பு… “ஸ்ரீ ரெட்டியை தடவி இருப்பேன்” என கொச்சையாக பேசியதற்கு, பலர் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

பிரபல தயாரிப்பாளர் கிருஷ்ணா ரெட்டியின் இரண்டாவது மகனான விஷால், திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் உதவி இயக்குனராக மாறினார். இதைத்தொடர்ந்து, ‘செல்லமே’ படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டு, ஹீரோவாக மாறினார்.

‘செல்லமே’ திரைப்படம் இவருக்கு வெற்றி படமாக அமைந்த நிலையில், இதைத்தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு, சிவப்பதிகாரம், தாமிரபரணி, மலைக்கோட்டை, சத்தியம், என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார்.

ஆரம்பத்தில் இவர் நடித்த திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால் கடந்த சில வருடங்களாக, விஷால் நடித்த அடுத்தடுத்த படங்கள் தொடர் தோல்வியை தழுவியது. ஒரு நடிகராக மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும் தோல்விகளை சந்தித்தார்.

இந்த நிலையில் தான், சமீபத்தில் நடிகர் விஷால் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்த ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது.

தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் தன்னுடைய 34-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில், விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் விஷால்… ஸ்ரீ ரெட்டி குறித்து பேசி சர்ச்சையில் சிக்கி உள்ளார். யூடியூப் சேனல் ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் நடிகர் விஷால் கலந்து கொண்டார். அப்போது அவரின் கண்கள் கட்டப்பட்டு அவர் முன்பு ஓனான் ஒன்று வைக்கப்பட்டது. அதை பயந்தபடி தடவிய விஷால், தன் முன்பு உள்ளது என்ன உயிரினம் என்பதை அவர் கண்டுபிடிக்கவில்லை.

அவரின் கண்ணில் கட்டப்பட்ட கட்டு அவிழ்த்த பின்னர், ஒரு நிமிடம் மிரண்டு போன விஷால்… அதை பார்த்துவிட்டு இதை தடவுறதுக்கு ஸ்ரீ ரெட்டியை இருப்பேன். என கொச்சையான வகையில் அனைவர் முன்பு பேச, இதற்க்கு பலர் தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.

ஸ்ரீ ரெட்டி நடிகர் விஷால் மீது பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *