விஷால் நல்ல நடிகையை தான் தேர்வு செய்துள்ளார்…உதயகுமார்

விஷால் நல்ல நடிகையை தான் தேர்வு செய்துள்ளார்…உதயகுமார்
  • PublishedMay 23, 2025

நடிகர் விஷால், தமிழ் சினிமாவில் நுழைந்து சில ஹிட் படங்கள் கொடுத்தவர். இவர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் மார்க் ஆண்டனி.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, கடைசியாக மதகஜராஜா படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரிலீஸ் ஆனது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்து வசூலில் சாதனை படைத்தது.

பிஸியாக படங்கள் நடித்து கொண்டிருந்த விஷால் சில தினங்களுக்கு முன் யோகி பட நிகழ்ச்சியில் அவர் நடிகை தன்சிகாவை ஆகஸ்ட் 29ம் தேதி திருமணம் செய்துகொள்ள போவதாக அறிவித்தார்.

இந்த செய்தி விஷால் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது அந்த பட சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் டத்தோ ராதா ரவி பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், “விஷால் மற்றும் தன்ஷிகா இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்கள். இந்த செய்தி மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.

இயக்குநர் ஆர்.பி. உதயகுமார் சொன்னது போல் விஷால் ஒன்றும் குழந்தை இல்லை. விஷால் அவருக்கு ஏற்ப ஒரு நடிகையை தான் தேர்வு செய்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *