கூலியை மிஞ்சியதா வார் 2… முதல் நாள் வசூல் விவரம்

கூலியை மிஞ்சியதா வார் 2… முதல் நாள் வசூல் விவரம்
  • PublishedAugust 15, 2025

சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி என தொடர் விடுமுறையை கருத்தில் கொண்டு நேற்றைய தினம் ரஜினியின் கூலி மற்றும் ஹ்ரித்திக் ரோஷனின் வார் 2 ஆகிய படங்கள் போட்டி போட்டுக்கொண்டு வெளியானது. கூலி படம் தான் முன்பதிவில் சக்கை போடு போட்டது.

ஆனால் வார் 2 படத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்திருப்பதால் தெலுங்கு சினிமாவில் அதிகம் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.

அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவான வார் 2 படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்திருந்தனர்.

ஆனால் வார் 2 படத்தில் 40 நிமிடங்கள் கழித்து தான் ஜூனியர் என்டிஆர் அறிமுக காட்சி வந்தது. இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. மேலும் படமும் கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகிறது.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும் விஎஃப்எக்ஸ் வேலைகள் சரியாக இல்லை. ஆகையால் மொத்தமாக முதல் நாளில் மட்டும் வார் 2 படம் 52.50 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது. குறிப்பாக தெலுங்கில் 23 கோடி வசூலை பெற்றிருக்கிறது.

மேலும் ஹிந்தியில் 29 கோடி வசூலை பெற்றிருக்கிறது. கூலி படத்தின் போட்டியால் வார் 2 படத்தின் வசூல் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் கூலி படம் இந்திய அளவில் 65 கோடி வசூலை பெற்றிருக்கிறது.

கூலி படமும் தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருவதால் வார் 2 படத்தின் வசூல் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தொடர் விடுமுறை காரணமாக தியேட்டருக்கு மக்கள் கூட்டம் வர வாய்ப்பு இருக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *