GBU படத்தில் வரும் வில்லன் கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவரா???

சென்ற வாரம் வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படம் உலகளவில் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இதுவரை ரூ. 180 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் அள்ளியுள்ளது.
இப்படத்தில் அஜித்துக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருந்தார் வில்லன் அர்ஜுன் தாஸ். அதுவும் இரட்டை வேடத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.
இந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தில் வரும் இந்த வில்லன் கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது அர்ஜுன் தாஸ் கிடையாதாம். நடிகர் எஸ்.ஜே. சூர்யா தான் வில்லனாக நடிக்கவிருந்தாராம்.
தமிழ், தெலுங்கு என தனது வில்லத்தனமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார் எஸ்.ஜே. சூர்யா. இவர் GBU படத்தில் முதலில் வில்லனாக நடிக்கவிருந்தது நிலையில், சில காரணங்களால் நடிக்க முடியாமல் போய்யுள்ளது. அதன்பின் தான் அர்ஜுன் தாஸ் வில்லனாக கமிட்டாகி நடித்துள்ளார் என தகவல் கூறுகின்றனர்.