சோகத்தில் பங்கேற்ற தளபதி விஜயின் லியோ டீம்…

சோகத்தில் பங்கேற்ற தளபதி விஜயின் லியோ டீம்…
  • PublishedSeptember 19, 2023

தளபதி விஜய் நடிப்பில் அடுத்த மாதம் வெளியாக உள்ள லியோ திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், கடந்த இரண்டு நாட்களாக இந்த திரைப்படத்தின் இரு போஸ்டர்கள் வெளியாகி தளபதி விஜயின் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இன்றும் இந்த படம் குறித்த ஒரு புதிய போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி அவர்களுடைய மகள் மீரா விஜய் ஆண்டனி, 17 வயதில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று லியோ திரைப்படம் குறித்த போஸ்டரை வெளியிடுவது ஏற்புடையதாக இருக்காது என்பதனால், இன்று வெளியிட வேண்டிய போஸ்டரை நாளை வெளியிட உள்ளதாக லியோ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *