ரஜினியின் உடல்நல குறைவுக்கு லோகேஷ் தான் காரணம்? ஆதாரங்களுடன் அந்தணன்
கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி ரஜினிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நல குறைவு காரணமாக சென்னையில் கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அக்டோபர் 4 ஆம் தேதி வீடு திரும்பி இருக்கிறார்.
ஆனால் அதற்குள்ளாக சமூக வலைத்தளங்களில் ரஜினியின் உடல்நிலை குறித்து நிறைய செய்திகள் வெளியானது. அதுவும் ரஜினி கூலி படத்தில் சண்டை காட்சியில் நடித்த போது தான் அவருக்கு உடல் நிலையில் பிரச்சனை ஏற்பட்டதாக வலைப்பேச்சு யூடியூப் சேனலில் கூறப்பட்டது.
இந்த விஷயம் பூதாகரமாகி பல ஊடகங்களில் ரஜினியின் உடல்நிலை மோசமானதற்கு காரணம் லோகேஷ் மற்றும் கூலி படக்குழு என்ற செய்தி உலாவ தொடங்கியது. இதை அடுத்து மருத்துவமனையில் ரஜினியை சந்தித்து விட்டு லோகேஷ் செய்தியாளர்களை சந்தித்து இருந்தார்.
அப்போது பேசிய அவர், 40 நாட்களுக்கு முன்பாகவே ரஜினி இதுபோன்று சிகிச்சைக்கு செல்ல உள்ளதை கூறிவிட்டார். ஏற்கனவே இது திட்டமிட்ட சிகிச்சை தான். ஆனால் பல ஊடகங்களில் கூலி படப்பிடிப்பால் இவ்வாறு நடந்ததாகவும், அதற்கு நான் தான் காரணம் என்றும் கூறுகின்றனர்.
ரஜினி இந்த வயதில் மக்களை மகிழ்விக்க வேண்டும் என்று ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து செய்து கொண்டிருக்கிறார். அவரை கஷ்டப்படும் அளவுக்கு நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம். அப்படி செய்தால் சன் பிக்சர்ஸ்சும் எங்களை சும்மா விடாது என்று லோகேஷ் கூறியிருந்தார்.
ஆனால் லோகேஷ் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார் என வலைப்பேச்சு அந்தணன் கூறியிருக்கிறார். ஏனென்றால் ரஜினி விடியற்காலை 3 மணிக்கு அவசரமாக மருத்துவமனைக்கு சென்ற நிலையில் இது எப்படி திட்டமிட்ட சிகிச்சையாக இருக்கக்கூடும்.
அதோடு தீராத வயிற்று வலி காரணமாகத்தான் ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இப்போது அவருக்கு ரத்தக்குழாய் வீக்கத்திற்காக ஸ்டன்ட் வைக்கப்பட்டுள்ளது. மேலும் கூலி படப்பிடிப்பில் மழையில் நனைந்து சண்டைக்காட்சியில் ரஜினி நடித்த போதுதான் அவருக்கு உடல் நிலையில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.
ரஜினிக்கு சிகிச்சை செய்த இரண்டு மருத்துவர்கள் பேசிய ஆடியோ இப்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. அதில் கூட படப்பிடிப்பு காரணமாகத்தான் ரஜினிக்கு இவ்வாறு நடந்ததாக பேசி உள்ளனர். அந்த ஆடியோவை வேண்டுமானாலும் லோகேஷுக்கு அனுப்பவா என அந்தணன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
ஆனால் லோகேஷ் பேசுகையில் வருகின்ற அக்டோபர் 15ஆம் தேதி ரஜினி கூலி படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறியிருந்தார். இப்போது உள்ள சூழலில் ரஜினிக்கு ஓய்வு தேவை இருக்கும் நிலையில் கூலி படப்பிடிப்பில் கலந்து கொள்வாரா என்பது சந்தேகம்தான்.