இவர்களில் யார் எம்.எஸ் சுப்புலட்சுமியி? என்ன படம்னு தெரியுமா?

இவர்களில் யார் எம்.எஸ் சுப்புலட்சுமியி? என்ன படம்னு தெரியுமா?
  • PublishedMay 22, 2024

பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ் சுப்புலட்சுமியின் பயோபிக் பிரம்மாண்டமாக உருவாக உள்ளது. இந்த படத்தின் நாயகியாக த்ரிஷா, நயன்தாரா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பிரபல தென்னிந்திய நடிகைகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

பழம்பெரும் கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ் சுப்புலட்சுமியின் பயோபிக் படம் 2025ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பெங்களூருவை சேர்ந்த ஒரு தயாரிப்பு நிறுவனம் இந்த படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் நடிக்க நயன்தாரா, த்ரிஷா கிருஷ்ணன் மற்றும் ராஷ்மிகா மந்தனா போன்ற சில நடிகைகளின் பெயர்கள் படத்திற்கு பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இருப்பினும், தயாரிப்பு குழுவோ அல்லது குறிப்பிடப்பட்ட நடிகைகள் இதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி, எம்.எஸ்.சுப்புலட்சுமி என்று அன்புடன் அழைக்கப்படுபவர், ஒரு புகழ்பெற்ற தமிழ் கர்நாடக பாடகி மற்றும் நடிகையும் ஆவார். இவர் பல மொழிகளில் பாடியுள்ளார். எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி உண்மையிலேயே ஒரு அதிசய குழந்தை. அவரது முதல் ரெக்கார்டிங் அவருக்கு 10 வயதாக இருந்தபோது வெளியிடப்பட்டது.

அதுமட்டுமின்றி, இசைத்துறையில் அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்காக இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவைப் பெற்ற முதல் இசைக்கலைஞரும் ஆவார். எம்.எஸ்.சுப்புலட்சுமி டிசம்பர் 11, 2004 அன்று தனது 88வது வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *