பணத்துக்காக எது வேணும்னாலும் செய்வீங்களா? யார் இந்த திவ்யா கள்ளச்சி?
டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டு அதன் மூலம் பேமஸ் ஆனவர் தான் திவ்யா கள்ளச்சி. டிக் டாக்கில் என்னுடைய காதலன் கார்த்தியை காணோம் என்றும் வெள்ளந்தியாக பேசி இவர் வெளியிட்ட வீடியோக்களை பார்த்த ரசிகர்கள், யாருப்பா அந்த கார்த்தி என வலைவீசி தேடி வந்தனர்.
ஒருகட்டத்தில் டிக்டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பின்னர் யூடியூப்பிற்கு தாவிய திவ்யா, அதிலும் கார்த்தியை தேடி அலையும் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். இதில் ஹைலைட் என்னவென்றால் தன்னுடைய கார்த்தியை தேடிக் கொடுக்க சொல்லி அவர் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கே சென்று அங்கு பேசி இருக்கிறார்.
இப்படி கார்த்தி கார்த்தி என பேசி டிரெண்டான திவ்யாவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, நான் தான் அந்த கார்த்தி என சொல்லிக் கொண்டு ஒருநபர் யூடியூப்பில் வலம் வரத் தொடங்கினார்.
ஒருகட்டத்தில் இருவரும் சேர்ந்து கண்டண்ட்டுக்காக சில வீடியோக்களை பதிவிட தொடங்கினர். ஒருகட்டத்தில் அதுவும் சலித்துப் போனதால், டிராக்கை மாற்ற ஆசைப்பட்டு, சிறுவர்களை பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கி அதன் மூலம் காசு பார்க்க ஆசைப்பட்டிருக்கிறார் திவ்யா கள்ளச்சி.
திவ்யா சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சித்ரா என்பவர் ஆதாரம் வெளியிட்ட நிலையில், திவ்யா கள்ளச்சியை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் கார்த்தியை ஏவிவிட்டு திவ்யா கள்ளச்சியை சிறுவர்களை வைத்து வீடியோ எடுக்க பிளான் போட்டு கொடுத்ததே சித்ரா தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டு அவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
யூடியூப்பில் இதுபோல ஒரு மாஃபியா கும்பலே இயங்கி வருவதாக கூறப்படுவதால் இன்னும் யாரெல்லாம் சிக்கப்போகிறார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது.
தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கும் திவ்யா கள்ளச்சி யூடியூப் மூலம் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பது அதைவிட அதிர்ச்சி அளிக்கும் தகவலாக உள்ளது.
திவ்யா கள்ளச்சி யூடியூப்பில் நான்குக்கும் மேற்பட்ட சேனல்களை வைத்திருக்கிறார். அதில் இரண்டு சேனல்களில் தான் அடிக்கடி வீடியோ பதிவிட்டு வருகிறார். அதில் வீடியோ பதிவிடுவதன் மூலம் திவ்யா கள்ளச்சிக்கு மாதம் 20 ஆயிரத்திற்கு மேல் வருமானம் வருகிறதாம்.
இதுமட்டுமின்றி பிற யூடியூப் சேனல்களுக்காகவும் சில வீடியோக்களில் நடித்தும் வருகிறார். அப்படி மாதத்திற்கு பிற யூடியூப் சேனல்களுக்காக 10க்கும் மேற்பட்ட வீடியோக்களில் நடித்தும் வருகிறார். அதில் ஒரு வீடியோவுக்கு 8 ஆயிரம் வரை சம்பளமாக வாங்குகிறாராம்.
இதன் அடிப்படையில் யூடியூப் மூலம் மட்டுமே அவருக்கு மாதத்திற்கு ஒரு லட்சத்திற்கு மேல் வருமானம் வருகிறதாம். இந்த வருமானத்தை மேலும் அதிகரிக்க ஆசைப்பட்டு தான் தற்போது கம்பி எண்ணி வருகிறார் திவ்யா.