குணா பட ஹீரோயின் ரோஷினி யாரு தெரியுமா?.. ஜோதிகாவோட சொந்த அக்காவா?

குணா பட ஹீரோயின் ரோஷினி யாரு தெரியுமா?.. ஜோதிகாவோட சொந்த அக்காவா?
  • PublishedMarch 6, 2024

மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் அசுர வெற்றி கமல் ஹாசனின் “குணா” படத்தை பற்றிய பல கதைகளை அலசி ஆராய உதவியாக மாறியிருக்கிறது.

“மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல.. அதையும் தாண்டி புனிதமானது” என கமல்ஹாசன் இளையராஜா இசையில் பாடி நடித்த காட்சிகள் பேசப்பட்டு வரும் நிலையில், அந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ரோஷினி யார் என்றும் குணா படத்துக்கு பிறகு அவர் ஏன் எந்த படத்திலும் நடிக்கவில்லை போன்ற கேள்விகள் எழத்தான் செய்கிறது.

நடிகை ஜோதிகாவும் ரோஷினியும் அக்கா, தங்கை என்று சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அது உண்மை இல்லை என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

ஜோதிகாவின் உடன் பிறந்த சகோதரியே நக்மா தான் என பலரும் நினைத்திருப்பார்கள். ஆனால், நக்மா ஜோதிகாவின் ஒன்று விட்ட சகோதரி தான்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நக்மா ஜோதிகாவை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக தனது சகோதரி ரோஷினியைத் தான் தமிழில் அறிமுகம் செய்தார்.

ரோஷினி 1997ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான சிஷ்யா படத்தின் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் தெலுங்கு படங்களிலும் ஒரு சில கன்னட படங்களிலும் நடித்த ரோஷினி அதன் பின்னர் தமிழில் நடிக்கவில்லை. திருமணம் செய்துக் கொண்டு குடும்பத்தை கவனித்து வருகிறார்.

ஆனால், குணா படத்தில் நடித்த ரோஷினி, கமல்ஹாசனின் முன்னாள் மனைவி சரிகா மூலம் அறிமுகமானவர். அதன் பின்னர் மும்பை சென்ற அவர் என்ன ஆனார்? எங்கே சென்றார் என்பதை கண்டு பிடிக்கவே முடியவில்லை என குணா படத்தின் இயக்குநர் சந்தான பாரதியே பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

குணா படத்தில் அபிராமி அபிராமி என கமல்ஹாசனை போல அந்த படத்தை பார்த்து விட்டு சினிமா பிரபலங்கள் பலரும் ரசிகர்கள் பலரும் அந்த நடிகையை அப்படி கொண்டாடினார்கள். ஆனால், அதன் பின்னர் அவர் யாரிடம் சிக்காமல் சினிமாவை விட்டு விலக காரணமே கமல்ஹாசன் கொடுத்த லவ் டார்ச்சர் தான் என பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றில் குற்றச்சாட்டுகளை அடுக்கியதும் குறிப்பிடத்தக்கது.

மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் விரைவில் 100 கோடி வசூல் ஈட்ட உள்ள நிலையில், குணா படம் பற்றிய பல விஷயங்கள் வெளி வரத் தொடங்கி உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *