அந்த பாடலை பார்த்து கடுப்பான மனைவி… திண்டாடும் நடிகர்
பிரபல நடிகரின் படம் வெளியாகி வசூலை வாரி குவித்து கொண்டிருக்கிறது. ஆனால் நடிகரின் வீட்டிலோ பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கிறதாம்.
ஏராளமான பெண் ரசிகைகளை கொண்டிருப்பவர் தான் இந்த நடிகர். ஆனாலும் எந்த கிசுகிசுவிலும் இதுவரை சிக்கியது கிடையாது.
ஆனால் தற்போது வெளியான படத்தில் நடிகர் அந்த நடிகையுடன் ரொம்பவும் நெருக்கமாக நடித்திருந்தார். அதுவும் அந்த பாடல் காட்சியில் ரொமான்ஸ் பொங்கி வழிந்தது.
ரசிகர்களுக்காக இப்படி ஒரு பாடல் விருந்தாக இருந்தாலும் மனைவிக்கு அது சுத்தமாக பிடிக்கவில்லையாம். இதுவரை ஹீரோ எந்த நடிகையுடனும் இந்த அளவுக்கு நெருக்கமாக நடித்தது கிடையாது.
அதனாலேயே மனைவிக்கு ஒரு சந்தேகம் வந்துவிட்டதாம். இந்த ஹீரோயினிடம் மட்டும் எதுக்கு இவ்வளவு நெருக்கம் என கேட்டிருக்கிறார்.
நடிகர் சமாதானம் சொன்னாலும் அவர் கோபம் குறையாமல் தான் இருக்கிறாராம். இதனால் நடிகர் திண்டாடி வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது