உலகம் முழுவதும் இனறு ரிலீஸானது கல்கி… தமிழ்நாட்டில் ஒரு பேனர் கூட இல்லயே ஏன்??

உலகம் முழுவதும் இனறு ரிலீஸானது கல்கி… தமிழ்நாட்டில் ஒரு பேனர் கூட இல்லயே ஏன்??
  • PublishedJune 27, 2024

ஒட்டுமொத்த திரையுலகமும் ஆவலுடன் எதிர்பார்த்த கல்கி 2898 AD இன்று வெளியாகி இருக்கிறது. சர்வதேச அளவில் ரிலீசான இப்படத்திற்கு முதல் காட்சியிலேயே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. அதேபோல் சோசியல் மீடியாவிலும் ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர்.

அதிலும் வெளிநாட்டு ரசிகர்கள் இதை திருவிழா போல் கொண்டாடுவது வைரலாகி வருகிறது. இப்படி திரும்பும் பக்கம் எல்லாம் கல்கி செலிப்ரேஷன் தான். ஆனால் தமிழ்நாட்டு பக்கம் திரும்பினால் வெறிச்சோடி போயிருக்கிறது.

எந்த ஆரவாரமும் இல்லாமல் இருக்கும் தியேட்டர்களை பார்த்தால் அதிர்ச்சியாக தான் இருக்கிறது. அதிலும் பிரபல திரையரங்குகளில் ஒரு பேனர் கூட வைக்கவில்லை.

கல்கி தமிழ்நாட்டில் மவுசு குறைந்ததற்கு காரணம் பிரமோஷன் தான். பட குழு அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் மும்பை, ஆந்திரா என சுற்றி சுற்றி படத்தை விளம்பரம் செய்தனர். ஆனால் தமிழ்நாட்டில் அதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

அவர்களுடைய மொத்த கவனமும் சர்வதேச அளவில் தான் இருந்தது. இது போக முதல் பாகத்தில் கமல் இரண்டு காட்சிகளில் மட்டும்தான் வருகிறார். அதுதான் இரண்டாவது பாகத்திற்கு லீட் ஆக அமைந்துள்ளது.

அப்படி என்றால் இரண்டாம் பாகத்தில் ஆண்டவரின் மிரட்டல் தரிசனம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இதுவும் தமிழ்நாட்டில் ஆரவாரம் குறைந்ததற்கு ஒரு காரணம்.

மேலும் பிரபாஸின் ஆதி புருஷ் புராண படம் மண்ணை கவ்வியது. அதன் காரணமாகவே தியேட்டர்களில் பெரிய அளப்பறை இல்லாமல் இருந்திருக்கலாம். ஆக மொத்தம் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு கல்கியின் மீது பெரிய அளவில் ஈர்ப்பு இல்லை என்பது இதன் மூலம் தெரிகிறது. இருப்பினும் உலக அளவில் கொண்டாடப்படும் இப்படம் வசூலில் பெரும் சாதனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *