புருஷன்னா இப்படி இருக்கனும்… ஜோ கொடுத்த வச்சவங்க தான்…

புருஷன்னா இப்படி இருக்கனும்… ஜோ கொடுத்த வச்சவங்க தான்…
  • PublishedOctober 31, 2024

சூர்யா தற்போது கங்குவா பட ப்ரோமோஷனில் பிசியாக உள்ளார். சிவாவின் இயக்கத்தில் ஞானவேலின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படம் நவம்பர் மாதம் 14 ஆம் தேதி திரையில் வெளியாகின்றது.

சூர்யாவின் திரைப்பயணத்திலேயே அதிக பொருட்செலவில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் கங்குவா.

அதனால் தீவிரமாக வடமாநிலங்களில் ப்ரோமோஷன் செய்து வருகிறார். ஏன் என்றால் அவர் எதிர்பார்த்த 2000 கோடி வசூல், அங்கு தான் சாத்தியம். இப்படி இருக்க தன்னை பற்றியும், மனைவி ஜோ பற்றியும் பல சுவாரசியமான விஷயங்களை நிறைய பேட்டிகளில் கொடுத்து வருகிறார்.

கடந்த இரண்டு வருடங்களாக சூர்யாவின் படம் எதுவும் வெளியாகாமல் இருந்ததால் சூர்யா ரசிகர்கள் சற்று ஏக்கத்தில் இருந்தனர். அவர்களின் ஏக்கத்தை போக்கும் வகையில் கங்குவா திரையில் வெளியாக இருக்கின்றது. கண்டிப்பாக இப்படம் சூர்யாவிற்கு மிகசிறந்த ஒரு கம்பேக் படமாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

பாலிவுட்டில் focus செய்யும் சூர்யா, அங்கு தனது மார்க்கெட்டை உயர்த்த வேண்டும் என்று நினைக்கிறார். அடுத்ததாக கர்ணன் படத்திலும் நடிக்கவிருக்கிறார். இப்படி இருக்க சமீபத்தில் ஒரு பேட்டியில், ஏன் இவர்கள் மும்பையில் செட்டில் ஆனார்கள் என்று கூறியிருக்கிறார்.

அதில் அவர் கூறியதாவது, “ஜோதிகா மும்பையை சேர்ந்தவர். அவர் எனக்காக கடந்த பல ஆண்டுகளாக சென்னையில் இருந்தார்.”

“ஒரு கணவனுக்காக மனைவி செய்யும் விஷயங்களை மனைவிக்காகவும் கணவன் செய்யவேண்டும். ஏன் எப்போதும் ஒரு பெண் கொடுப்பவளாகவும், ஆண் அவளிடமிருந்து அனைத்தையும் பறிப்பவனாக இருக்க வேண்டும். ஒரு ஆணுக்கு என்னவெல்லாம் தேவையாக இருக்கிறதோ, அது எல்லாமே பெண்ணுக்கும் தேவை தான். எனவே தான் ஜோதிகாவிற்காக நான் மும்பைக்கு மாறியிருக்கின்றேன்” என்றார் சூர்யா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *