மூவர் உயிரிழப்பு; ரசிகர்களுக்கு யஷ் விடுத்துள்ள வேண்டுகோள்

மூவர் உயிரிழப்பு; ரசிகர்களுக்கு யஷ் விடுத்துள்ள வேண்டுகோள்
  • PublishedJanuary 9, 2024

கன்னட திரையுலகில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘கே.ஜி.எப்’ படத்தில் நடித்தவர் நடிகர் யஷ். இவருக்கு என்று கர்நாடகாவில் தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

இதையடுத்து நேற்று அவரது 38-வது பிறந்த நாளை யொட்டி கர்நாடக மாநிலம் கடக் பகுதியில் உள்ள சுரங்கி என்ற இடத்தில் கட் அவுட் வைத்தபோது மின்சாரம் தாக்கி அனுமந்த ஹரிஜன் (21), முரளி நடவினமணி (20), நவீன்காஜி (19) ஆகிய 3 ரசிகர்கள் பலியானார்கள். மேலும் 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

இந்த நிலையில் மின்சாரம் தாக்கி இறந்த ரசிகர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று நடிகர் யஷ் ஆறுதல் தெரிவித்தார்.

மேலும் ரசிகர்கள் யாரும் இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம். உங்களின் அன்பை சமூக வலைதளங்களில் செல்போனில் காண்பித்தால் கூட போதும், மனதில் இருந்தால் போதும்.

கட் அவுட் வைத்து அதனை வெளிப்படுத்த வேண்டாம். இது போன்று எதிர்காலத்தில் யாரும் செயல்பட வேண்டாம் முற்றிலும் தவிர்த்து விடுங்கள் என்று அறிவுரையும் கூறினார்.

இதற்கிடையே மின்சாரம் தாக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50ஆயிரமும் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *