”யோவ் வெளியே போயா” : வடிவேலுவிடம் கடுமையாக நடந்துக்கொண்ட இயக்குனர்!

”யோவ் வெளியே போயா” : வடிவேலுவிடம் கடுமையாக நடந்துக்கொண்ட இயக்குனர்!
  • PublishedJune 23, 2023

நடிகர் வடிவேலு பல்வேறு பிரச்சினைகளையும் தாண்டி தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

அவ்வாறு அவர் நடிப்பில் நாய் சேகர் ரிட்டன்ஸ், மாமன்னன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகிய நிலையில், தற்போது சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

தற்போது இந்த படத்தின் எஞ்சியுள்ள காட்சிகளை படமாக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, எஞ்சியுள்ள காட்சிகளை எடுக்க கால்ஷீட் கொடுக்காமல் வடிவேலு பிரச்சினை செய்து வருவதாக கூறப்படுகிறது.

சந்திரமுகி 2 ஷூட்டிங்கில் வடிவேலுவின் ரகளையான வீடியோ,chandramukhi 2  shooting spot video of vadivelu epic reaction | Galatta

இது குறித்து வாசு, வடிவேலுவிடம் கேட்டதற்கு தற்பொழுது என்னால் முடியாது எனக்கு வேறு ஒரு கமிட்மெண்ட் இருக்கிறது. அந்த கமிட்மெண்டை என்னால் தவிர்க்க முடியாது. அதை முடித்துவிட்டு வேண்டுமானால் இப்படத்தில் நடித்துக் கொடுக்கிறேன் என்று கூறியிருக்கிறாராம்.

 

அதற்கு இயக்குனர், உங்களின் காட்சிகள் முக்கால்வாசி முடிவு பெற்றதால், இன்னும் ஒரு நாள் நடித்தால் போதும். உங்களின் அனைத்து காட்சியும் இப்படத்தில் முடிவு பெற்றுவிடும் என கூறியுள்ளார்.

ரிலீஸ் தேதியை லாக் செய்த சந்திரமுகி 2 படக்குழு.. யார் கூட மோத போறாங்க  தெரியுமா? - Cinemapettai

அவ்வாறு நீங்கள் வரவில்லை என்றால், நீங்கள் இடம்பெறும் காட்சிகள் பாதிலேயே நின்று விடும். இருப்பினும் வடிவேலு என்னால் முடிவே முடியாது என பிடிவாதமாக கூறியுள்ளார். அவ்வாறு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் இறுதி வரை மறுத்த வடிவேலுவை பார்த்து வெளியே போயா என பி.வாசு கடுமையாக நடந்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *