ஒரு பாட்டுக்கு மட்டும் 21… கங்குவா ரகசியத்தை வெளியிட்ட திஷா பதானி
ஒரு பாட்டுக்கு மட்டும் 21… கங்குவா ரகசியத்தை வெளியிட்ட திஷா பதானி
நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த திஷா பதானி, அப்படத்திற்கு பிறகு சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்தில் அறிமுகமாகவிருக்கிறார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்காக தற்போது பட ப்ரோமோஷன் பணிகளில் பட குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
சமீபத்தில் வெளியான yolo பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாட்டில் திஷா பட்டாணி டான்சில் தெறிக்க விட்டுள்ளார். மேலும் இந்த பாடலில் நடிகை காட்டிய கவர்ச்சி தமிழ் ரசிகர்களை கட்டிபோட்டுள்ளது.
சர்வதேச அளவில் பயங்கரமாக ப்ரோமோஷன் செய்து வரும் நிலையில், இந்த படம் 3000த்திற்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிவுள்ளது. மேலும் இந்த படம் சைனீஸ், ஸ்பானிஷ், ஜாப்பனீஸ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.
இப்படி இருக்க, yolo பாடல் பற்றிய ஒரு சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகி அது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. “எண்ணற்ற இடங்களில் 4 நாட்கள் ‘யோலோ’ பாடலுக்கான படப்பிடிப்பு நடந்தது, இதற்காக 21 உடைகளை நான் மாற்றி இருந்தேன்” என்றார்.
இதை கேட்ட ரசிகர்கள், அடேங்கப்பா இத கவனிக்காம விட்டோமே என்று, மீண்டும் மீண்டும் பாடலை பார்த்து ஆடைகளை மட்டும் எண்ணிக்கொண்டிருக்கிறார். மேலும், ஒரு பாடலுக்கு இவ்வளவு மெனக்கிட்டு இருக்கிறார்கள் என்றால் படத்தில் ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து மெருகேற்றியிருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.