உலக தாய்மொழி தினத்தில் கமல் பதிவிட்ட உருக்கமான பதிவு.
உலகநாயகன் கமல் ஹாசன் உலக தாய்மொழி தினமான இன்று ,தனது சமூக வலைத்தளப் பதிவின் மூலம் தமிழுக்கும் தாய்மொழிக்கும் உரிய மரியாதையை வெளிப்படுத்தியுள்ளார்.
அவரது உணர்ச்சிபூர்வமான வரிகள் தற்போது இணையத்தில் வைரலாகி, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
குறித்த பதிவில், “மரபணுவில் உருவாகி, தாய்ப்பாலில் உணவாகி, செவிப்பொறியில் ஒலியாகி உடலுக்குள் உயிராகி நிற்பது என் தாய்மொழி.
உறக்கத்தில் உளறவும், சிரமப் பொழுதில் சிந்தித்து இருக்கவும் எனக்குச் சொல்லாகி வருவது தமிழ். அவரவர் தாய்மொழி அவரவர் வாழ்வு. எனக்கு என் தாய்மொழி என்றும் சுவாசம். தாய்மொழி நாளில் தமிழர்களை வாழ்த்துகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.