வாழை பட நடிகைக்கு இப்படி ஒரு பழக்கமா?
வாழை படத்தில் ஹீரோவின் அக்காவாகவும் கலையரசனுக்கு ஜோடியாகவும் நடித்து, தன்னுடைய சிறப்பான நடிப்பின் மூலம் எல்லோர் மனங்களிலும் ஹீரோயினாகவே இடம் பிடித்தவர் நடிகை திவ்யா துரைசாமி.
இவர் பகிர்ந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரல் ஆகிவருகிறது
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், மதில், குற்றம் குற்றமே, எதற்கும் துணிந்தவன், சஞ்சீவன், ப்ளூ ஸ்டார், அதர்ம கதைகள் மற்றும் வாழை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள திவ்யா துரைசாமி அடிக்கடி தன்னைத் தேடி சில காக்கைகள் வந்துவிடும் என்றும், கடந்த ஒரு மாதமாக இந்த காக்கை தன்னுடனே இருந்து வருகிறது என தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் உடல்நலம் குன்றிய காகத்திற்கு சிகிச்சை அளித்தும் பேணி பாதுகாத்து வருகிறாராம்.
இதேவேளை ஒற்றுமையை கற்றுக் கொடுக்கும் காகத்தை வளர்க்கும் திவ்யா துரைசாமி பகிர்ந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.