ஆஸ்கார் கதவை தட்ட தயாராகும் கோலிவுட் நாயகன்!

ஆஸ்கார் கதவை தட்ட தயாராகும் கோலிவுட் நாயகன்!
  • PublishedMarch 21, 2023

ஒரு திரைப்படம் சிறந்த படமாக இரசிகர்கள் கொண்டாடினாலும், அதற்கான அங்கீகாரம் என்னவோ சிறந்த விருதுகள் கிடைப்பதில் தான் இருக்கிறது.

தமிழ் திரையுலகில் இரசிகர்கள் கொண்டாடிய நிறைய திரைப்படங்கள், பின்னணி இசைகளுக்கு விருது கிடைக்காமல் இருப்பது வருந்ததக்க விடயம்தான்.

இந்நிலையில் சமீபத்தில் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டுப்புற பாடலுக்காக ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. அந்த படத்தில் இசையமைத்த கீரவாணி அந்த விருதினை பெற்றுக் கொண்டார். இப்போது அடுத்த ஆஸ்கர் விருதுக்காக உலக நாயகன் கமல்ஹாசன் தயாராகி வருவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

அதாவது ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் இந்தியன் 2 திரைப்படத்திற்கு தான் ஆஸ்கார் விருது கிடைக்கும் முனைப்புடன் கமல் போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான முதல் முயற்சியாக,  சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தை கொண்டு வரவேண்டும் என்பதற்காக பிரம்மாண்டமாக செட் தயார் செய்து இருக்கிறார்களாம். அந்த செட்டை பார்த்த எல்லோருமே பிரம்மித்து போய் உள்ளனராம். ஏனென்றால் அச்சு அசலாக அந்த காலத்திற்கு கொண்டு போய் விட்டதாம்.

அதுமட்டுமின்றி நாங்கள் வேறு உலகத்திற்கு சென்று விட்டோம் என பலரும் கூறியிருக்கின்றனர். இந்தியன் 2 படம் நிச்சயமாக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் என மொத்த படக்குழுவும் மார்பை தட்டிக் கொள்கிறார்களாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *