இத்தாலி மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் வெளியாகும் காந்தாரா திரைப்படம்!

இத்தாலி மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் வெளியாகும் காந்தாரா திரைப்படம்!
  • PublishedMarch 21, 2023

கன்னட மொழியில் தயாரான ‘காந்தாரா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

சுமார் 16 கோடி ரூபாய் பொருட் செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் நினைத்ததை விட அதிகளவு வசூல் ஈட்டியது. இதன்படி இந்த திரைப்படம் 400 கோடி ரூபாய் வரையில் வசூல் செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த படத்தை வேற்று மொழிகளில் மொழிப்பெயர்த்து வெளியிடவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள படத்தின் நாயகனான ரிஷப் ஷெட்டி  ‘காந்தாரா படத்துக்கு வெளிநாட்டு ரசிகர்களிடம் இருந்தும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனால் இத்தாலியன் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் காந்தாரா படத்தை டப்பிங் செய்து வெளியிட இருக்கிறோம். இந்த தகவலை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *