‘ஒரு காதல் வந்திசோ…..புது காதல் வந்துச்சோ…..’ : காதலில் விழுந்த வாரிசு நடிகை!

‘ஒரு காதல் வந்திசோ…..புது காதல் வந்துச்சோ…..’ : காதலில் விழுந்த வாரிசு நடிகை!
  • PublishedMarch 17, 2023

எந்த கதாபாத்திரம் என்றாலும் கச்சிதமாக முடித்து கொடுப்பவர் நடிகை வரலக்சுமி சரத்குமார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்திலும் தூள் கிளப்பி வருகிறார்.
நிற்க நேரம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் இவருக்கு புதிதாக காதல் துளிர் விட்டிருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

விஜய் டிவி பிரபலம் ஒருவரை காதலித்து வரும் அவர் எப்போது வேண்டுமானாலும் தன் திருமண அறிவிப்பை வெளியிடலாம் என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.

ஏற்கனவே விஷாலை உருகி உருகி காதலித்த வரலட்சுமி திடீரென அவரை பிரேக் அப் செய்தார். அதைத்தொடர்ந்து நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இவரின் மனதையும் ஒரு இளம் ஹீரோ மாற்றி இருக்கிறார். அவர் வேறு யாரும் அல்ல விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சந்தோஷ் பிரதாப் தான்.

சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் இவர் வரலட்சுமி உடன் இணைந்து கொன்றால் பாவம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.  சமீபத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. அந்தப் பட சூட்டிங்கின் போது தான் இவர்கள் இருவருக்கும் அதிக நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது.

எங்கு சென்றாலும் சேர்ந்து செல்வது, அவுட்டிங் போவது என இருவரும் தங்கள் காதலை வளர்த்திருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் ஷூட்டிங் முடிந்து செல்லும் போது கூட காத்திருந்து அழைத்துச் செல்வது போன்ற சம்பவங்களும் நடந்து இருக்கிறது.

இதனை படக்குழுவினரும் கண்டும் காணாதது போல் நோட் செய்திருக்கின்றனர். இப்படி நெருக்கம் காட்டி வரும் இந்த ஜோடியின் காதல் விவகாரம் தற்போது அனைவருக்கும் தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *