”கலக்கப்போவது யாரு” ஜாம்பவான் உயிரிழப்பு :கவலையில் இரசிகர்கள்!

”கலக்கப்போவது யாரு” ஜாம்பவான் உயிரிழப்பு :கவலையில் இரசிகர்கள்!
  • PublishedMarch 22, 2023

திரையுலகில் அடுத்தடுத்த மரண செய்திகள் வெளிவந்து ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது. அதிலும் சமீபத்தில் உயிரிழந்த மயில்சாமியின் இறப்பு இன்னும் கூட பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் மற்றும் ஒரு துயர செய்தி வெளிவந்து அனைவரையும் கலங்கடித்துள்ளது.

அந்த வகையில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கோவை குணா தற்போது உடல்நல குறைவால் மரணம் அடைந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவருடைய மறைவுக்கு இரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

தற்போது 54 வயதாகும் கோவை குணா கோவை மாவட்டம் சரவணம்பட்டி அருகே இருக்கும் விநாயகபுரம் என்ற இடத்தில் வசித்து வந்தார். இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடித்து விட்ட இவர் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்த நிலையில் சமீப காலமாக அவர் சிறுநீரக செயலிழப்பின் காரணமாக சிகிச்சை பெற்று வந்ந நிலையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *