செக் இல்ல பணப்பெட்டியோடு வந்தா பாருங்க : அஜித், விஜய்யை ஓவர்டேக் செய்யும் அளவுக்கு கஜானாவை நிரப்பும் பிரபல நடிகர்!

செக் இல்ல பணப்பெட்டியோடு வந்தா பாருங்க : அஜித், விஜய்யை ஓவர்டேக் செய்யும் அளவுக்கு கஜானாவை நிரப்பும் பிரபல நடிகர்!
  • PublishedMarch 4, 2023

டாப் நடிகர்களான அஜித் விஜய் ஓவர் டேக் செய்யும் அளவிற்கு பல இடங்களில் சொத்துக்களை வாங்கி குவித்து வருகிறார் ஹீரோ ஒருவர்.
விஜய் வாரிசாக சினிமாவில் நுழைந்தாலும் சரி, அஜித் தானாகவே கஷ்டப்பட்ட சினிமாவில் வந்தாலும் சரி, இருவருமே இப்போது இந்த உயரத்தை அடைய அவர்களது திறமையும், உழைப்பும் தான் காரணம். அதனால் தான் இன்றளவும் அவரது ரசிகர்கள் இவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்கள்.
ஆனால் 50 வயதை நெருங்கிய இவர்கள் இருவரும் தற்போது வரை ஹீரோ அந்தஸ்தை விட்டுக் கொடுக்காமல் உள்ளனர். அதுமட்டுமின்றி வருஷத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்கள். ஆனாலும் ஒரு படத்திற்கு 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருகிறார்கள்.
இந்நிலையில் அஜித், விஜய் ஆகியோரை ஓவர்டேக் செய்யும் அளவிற்கு தன்னுடைய கஜானாவை ஹீரோ ஒருவர் நிரப்பி வருகிறார். ஆரம்பத்தில் ஜீரோவாக இருந்த அந்த நடிகருக்கு இப்போது இல்லாத வசதிகளே கிடையாதாம். அந்த அளவுக்கு சினிமாவின் மூலம் நிறைய சம்பாதித்துள்ளார்.
அவர் தான் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. வருடத்திற்கு எத்தனை படங்கள் என்று எண்ணிக்கையே வைத்துக் கொள்ள முடியாத அளவுக்கு சகட்டுமேனிக்கு படங்களில் நடித்து வருகிறார். இவர் சினிமாவில் தலை தூக்கி சில ஆண்டுகள் தான் ஆனாலும் கிட்டத்தட்ட 70 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
அதுமட்டுமின்றி வில்லன் கேரக்டர் என்றால் இவ்வளவு, கெஸ்ட் ரோலில் நடிக்க வேண்டும் என்றால் இவ்வளவு என கரராக பேசி விடுவாராம்.
அதாவது எனக்கு படத்தை விட பணம் தான் முக்கியம் என செக் அல்லது பணபெட்டியுடன் வரும் தயாரிப்பாளர்களுக்கு கல்ஷீட்டை வாரி வழங்கி வருகிறார் விஜய் சேதுபதி.
தனக்கு மார்க்கெட் உள்ள போதே பணத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவில் இவ்வாறு செய்து வருகிறார். அதன் விளைவாக இப்போது விஜய் சேதுபதிக்கு ஹீரோ வாய்ப்புகள் குறைந்து விட்டதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *