ட்ரெய்லர் ரிலீஸ் திகதியுடன் வந்த ஐஸ்வர்யா ராய்!

ட்ரெய்லர் ரிலீஸ் திகதியுடன் வந்த ஐஸ்வர்யா ராய்!
  • PublishedMarch 25, 2023

மணிரத்தினம் இயக்கத்தில் மிகப் பெரிய நட்சத்திர பட்டளமே இணைந்து நடித்து வரும்  திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். தற்போ இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது.

இதற்கான ஆயத்தப்பணிகளை படக்குழுவினர் முழு வீச்சில் செய்து வருகின்றனர். அந்தவகையில் சமீபகாலமாக இந்த படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

முதலில் அகநக பாடல் வெளியானது. பின்பு ஆதித்த கரிகாலனின் மேக்கிங் வெளியானது. தற்போது ஐஸ்வர்யா ராய் நடிக்கும், நந்தினி கதாபாத்திரத்திற்கான போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்த போஸ்டரில் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ட்ரெய்லர் வரும்  மார்ச் 29ஆம் திகதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *