பில்லாவுக்கு பின் மீண்டும் பிகினியில் நயன்தாரா! வெளியான தகவல்

பில்லாவுக்கு பின் மீண்டும் பிகினியில் நயன்தாரா! வெளியான தகவல்
  • PublishedMarch 25, 2023

ஷாருக்கானுடன் நடிக்கும் ஜவான் படத்தில் நடிகை நயன்தாரா மீண்டும் பிகினியில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நயன்தாரா. அறிமுகமான முதல் படமே மெகா ஹிட்டானது. மேலும் அந்தப் படத்தில் அவரது நடிப்பை பார்த்தவர்கள் நயன்தாரா தமிழ் சினிமாவில் பெரும் ரவுண்டு வருவார் என கணித்தனர்.

ஐயா படத்துக்கு பிறகு சில படங்களில் நடித்த நயன்தாராவுக்கு ஜாக்பாட் அடித்தது. அதன்படி அவர் சந்திரமுகி படத்தில் ரஜினிக்கும் ஹீரோயினானார். துளசி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர் அந்தப் படத்திலும் சிறப்பான நடிப்பையே வெளிப்படுத்தினார். அதன் பிறகு கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்தார் நயன்தாரா.

சந்திரமுகி படத்துக்கு பிறகு விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தார் நயன். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் தனது வெற்றிக்கொடியை பறக்கவிட்டு முன்னணி நடிகையாக வலம் வந்தார். எனவே அடுத்த சில வருடங்களுக்கு நயனின் ஆட்சிதான் கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் நடைபெற போகிறது என பலர் ஆரூடம் கூறினர். அவர்களின் ஆரூடம் பலிக்கும்படிதான் நயனின் க்ராஃபும் இருந்தது.

சூழல் நல்லபடியாக போய்க்கொண்டிருக்க சில தனிப்பட்ட பிரச்னைகளை சந்தித்தார் நயன்தாரா. அதனால் அவர் சினிமாவிலிருந்து ஒதுங்கும் சூழ்நிலை உருவானது. ஆனால் சில காலத்திலேயே அவர் மீண்டும் நடிக்க முடிவெடுத்து ரீ எண்ட்ரி கொடுத்தார். அவரது இரண்டாவது இன்னிங்ஸில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள அறம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அந்தப் படங்களும் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

மீண்டும் பிகினியில் நயன்தாரா?

இதற்கிடையே காதலால் பிரச்னைகளை சந்தித்த நயன், நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவனை காதலிக்க ஆரம்பித்தார். இருவரும் தீவிரமாக பல வருடங்கள் காதலித்தனர். ஒருவழியாக கடந்த வருடம் ஜூன் மாதம் இருவரும் மகாபலிபுரத்தில் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகும் நயன் தொடர்ந்து நடித்துவருகிறார்.

தனது இரண்டாவது இன்னிங்ஸில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன் தற்போது கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட்டிலும் நடிக்கிறார். அதன்படி அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் அவர் கமிட்டாகியிருக்கிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மேலும், நயன்தாராவின் போர்ஷன் முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜவான் படத்தில் நயன்தாரா பிகினியில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2007ஆம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்த பில்லா படத்தில் நயன்தாரா பிகினி உடையில் தோன்றியிருந்தார். அப்போது அது மிகப்பெரிய பேசுபொருளானது. தற்போது திருமணம் ஆகியிருக்கும் சூழலில் நயன்தாரா பிகினியில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *