சமந்தாவுக்கே டஃப் கொடுத்த சாயிஷா..ராவடி பாடலில் அதிரிபுரியான ஆட்டம்!

சமந்தாவுக்கே டஃப் கொடுத்த சாயிஷா..ராவடி பாடலில் அதிரிபுரியான ஆட்டம்!
  • PublishedMarch 25, 2023

பத்து தல படத்தில் இருந்து ராவடி பாடலின் முழுமையான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

சிம்பு நடித்துள்ள பத்து தல திரைப்படம் வரும் 30ம் திகதி உலகம் முழுவது வெளியாகிறது.இன்னும் ஒரு வாரமே உள்ளதால் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.அதன்படி சாயிஷாவின் அதிரி புதிரியான ஆட்டத்தில் உருவாகியுள்ள ராவடி பாடலின் முழுமையான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

பத்து தல படத்தின் முதல் பாடல் சிம்பு பிறந்தநாளில் வெளியானது. அதனைத் தொடர்ந்து ஏஆர் ரஹ்மானின் மகன் அமீன் பாடிய நினைவிருக்கா பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. மேலும் கடந்த வாரம் நடைபெற்ற ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், பத்து தல படத்தின் மற்ற பாடல்களும் வெளியாகின. அதில், சுபா, நிவாஸ் இணைந்து பாடிய ராவடி பாடல் பலரது கவனத்தையும் ஈர்த்தது. இப்பாடலின் வரிகளை சினேகன் எழுதியுள்ளார்.

பத்து தல ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ராவடி பாடல் லைவ்வாக பெர்ஃபாமன்ஸ் செய்யப்பட்டது. அதனை சூப்பர் சிங்கர் புகழ் ரக்‌ஷிதாவும் நிவாஸும் பாடியிருந்தனர். அப்போது தான் ராவடி பாடலுக்கு சாயிஷா நடனமாடியுள்ளதாக இயக்குநர் கிருஷ்ணா தெரிவித்தார். ஆர்யாவை திருமணம் செய்துகொண்ட பின்னர் குழந்தையும் பெற்றெடுத்தார் சாயிஷா. அதன்பின்னர் சினிமாவில் நடிக்காமல் இருந்த சாயிஷா, பத்து தல படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடியது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

 ஆர்யா தான் காரணம்

பத்து தல ட்ரெய்லர் வெளியீட்டுக்குப் பின்னர் ராவடி பாடலின் லிரிக்கல் வீடியோ மட்டுமே வெளியானது. அதனைத் தொடர்ந்து தற்போது ரசிகர்களுக்கு வைப் கொடுப்பதற்காக பாடலின் முழு வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. புஷ்பா படத்தின் ஊ சொல்றீயா மாமா பாடலுக்கு சமந்தா நடனம் ஆடியிருந்தார். இப்போது அவருக்கே டஃப் கொடுக்கும் விதமாக கிளாமராக ஆட்டம் போட்டு அதிரடி காட்டியுள்ளார் சாயிஷா. இந்தப் பாடல் வெளியானது முதல் இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

சாயிஷா தனது படங்களில் கூட கிளாமராக இல்லாமல் க்யூட்டாக நடிப்பது வழக்கம். ஆனால், முதன்முறையாக ஐட்டம் பாடலுக்கு செம்ம கிளாமராக ஆட்டம் போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நேற்று கமலா திரையரங்கில் நடைபெற்ற பத்து தல படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் சாயிஷா கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ஏஆர் ரஹ்மான் சார் இசையில் ராவடி பாடலுக்கு நடனமாடியது எனக்கு பெருமையாக உள்ளது. இதற்கு ஆர்யா தான் காரணம், அவர் தான் இப்பாடலுக்கு நடனமாட உற்சாகம் கொடுத்தார் எனக் கூறியிருந்தார்.

கன்னடத்தில் நரதன் இயக்கத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி உள்ளிட்ட பலர் நடித்த ‘முஃப்தி’ படத்தின் தமிழ் வெர்ஷனாக வெளியாகிறது. சிம்புவுடன் கெளதம் கார்த்திக், கெளதம் மேனன், பிரியா பவானி சங்கர், கலையரசன், டிஜே, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீத் தயாரித்துள்ள பத்து தல வரும் 30ம் திகதி வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்திற்கான டிக்கெட் புக்கிங் நாளை (26) முதல் தொடங்குவதாக படக்குழு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *