லோகேஷுக்கு ஸ்கெட்சு போட்ட சிம்பு!
மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகி திரைப்படங்களை தொடர்ந்து நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் பத்துதல. இந்த படம் வரும் 30 ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இந்த படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு அண்மையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட சிம்பு லோகேஷுக்கு ஸ்கெட்சு போட்டு பேசியிருக்கிறார்.
அதாவது முதலில் பத்து தல படத்தில் கௌதம் கார்த்திக் தான் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. கேமியோ தோற்றத்தில் நடிக்க வந்த சிம்பு இப்போது கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
சிம்பு பேசுகையில் பத்து தல படத்தில் பல பிரபலங்கள் நடித்திருந்தாலும் எல்லோருக்குமே சமமான கதாபாத்திரத்தை இயக்குனர் கொடுத்துள்ளார். அதேபோல் தான் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்திலும் எல்லா கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.
மேலும் லோகேஷின் படங்கள் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக அமைந்துள்ளதாக சிம்பு புகழ்ந்து பேசி இருந்தார்.
முன்னணி நடிகர்கள் லோகேஷின் படத்தில் நடித்திட வாய்ப்பு கிடைக்காதா என்று தவம் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.