பொன்னியின் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பில் வெளியான தகவல்

பொன்னியின் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பில் வெளியான தகவல்
  • PublishedMarch 26, 2023

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் முன்னணி நடிகர்கள் நடித்திருந்தார்கள். இப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகியது.

பெரும், எதிர்பார்ப்புக்கு நடுவில் வெளியாகிய பொன்னியின் செல்வன் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இது வசூல் ரீதியாக பயங்கரமாக வெற்றி பெற்றது. இதுவரை 500 கோடி ரூபாய்க்கு மேல் பொன்னியின் செல்வன் வசூலித்துள்ளது.

அதனைத்தொடர்ந்து பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஏப்ரல் 28 திரையரங்குகளில் வெளியாகும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனிடையே பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரமோஷன் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா ட்ரெய்லர் வரும் மார்ச் 29ம் திகதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் பாரதிராஜா உள்ளிட்ட முக்கிய திரை பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *