அஸ்வினை போல் வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட சூரி!

அஸ்வினை போல் வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட சூரி!
  • PublishedMarch 26, 2023

நடிகர் சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகுகிறார்.

இந்நிலையில், இந்த திரைப்படம் குறித்து பொதுநிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில்  ‘பல வருடங்களாக நகைச்சுவை நடிகராக இருந்திருக்கிறேன். ஆனால் நான் ஹீரோவாக நடிக்க நினைத்திருந்தால்  இதுவரை 10 படங்களில் நடித்திருப்பேன்.

காமெடியனாக பிசியாக இருந்த போது கதாநாயகனாக நடிப்பதற்காக நிறைய கதைகள் தன்னைத் தேடி வந்தது. இருப்பினும் அதில் நடிக்க தனக்கு உடன்பாடும் இல்லை. ஆனால் நகைச்சுவை நடிகராக இல்லாமல் ஒரு கேரக்டராக நடிக்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாளாகவே இருந்தது.

காமெடியன் சூரி என்பதைத் தாண்டி குணச்சித்திர கேரக்டர் எனக்குள் இருப்பதை சரியான சமயத்தில் வெளிக்காட்ட காத்திருந்தேன்.பெரிய பெரிய இயக்குனர்கள் சிலரும் காமெடி பட கதாநாயகனாக நடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

இருந்தாலும் டாப் ஹீரோக்களின் படங்களில் காமெடியனாகவே நடித்துக் கொண்டிருப்பதால் அதை முழு நீள படங்களில் நடிப்பதில் கொஞ்சம் அவநம்பிக்கை இருந்தது. அதனால் தான் இதுவரை ஹீரோவாக தன்னை தேடி வந்த படங்களை எல்லாம் வேண்டாம் என சொல்லிவிட்டேன்.

ஆனால் விடுதலைப் படத்தில் குமரேசன் கதாபாத்திரத்தில் என்னை நடிக்க வைத்ததன் மூலம் எனக்குள் இருக்கும் நடிகனை கண்டுபிடித்த வெற்றிமாறனுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை’ என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் சூரி வெளிப்படையாகப் பேசி உள்ளார்.

இதேபோல்தான் முன்னதாக அஸ்வினும் 40 கதைகளை கேட்டு தூங்கிவிட்டதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *