திரிஷா பதிவால் வெடித்த சர்ச்சை.

திரிஷா பதிவால் வெடித்த சர்ச்சை.
  • PublishedFebruary 28, 2026

விஜய் சங்கீதாவின் விவாகரத்து தற்போது பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் நடிகை திரிஷாவின் காதல் பற்றிய பதிவு இணையத்தில் மீண்டும் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. கோலிவுட்டில் இவருக்கு ஏற்ற ஜோடி என்றால் அது விஜய் தான். இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரி திரையில் ஒர்க் அவுட் ஆனதால் கடந்த 20 ஆண்டுகளில் 5 படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். இவர்கள் நடித்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பு பெற்றதோ, அதே அளவுக்கு அவர்கள் இருவரும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த ஆண்டு, மார்ச் 29ஆம் தேதி நடிகை திரிஷா காதல் குறித்த கேப்சனோடு போட்டுள்ள பதிவு தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அந்தப் பதிவில் காதல் என்றுமே வெல்லும் என குறிப்பிட்டுள்ள திரிஷா, பட்டு சேலை அணிந்து தலையில் மல்லி பூ வைப்பது போன்ற புகைப்படத்தையும் அதில் பதிவு செய்திருந்தார். அந்த சமயத்தில் திரிஷாவுக்கு நிச்சயதார்த்தமா என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். குறித்த பதிவில் பின்னணியில் அலைபாயுதே படத்தில் இடம்பெறும் ரகசிய சிநேகிதனே பாடலை ஒலிக்க விட்டிருந்தார் திரிஷா.

தற்போது அந்தப் பதிவை பார்த்த நெட்டிசன்கள், “ஓஹோ ரகசிய சிநேகிதனா… இப்பதான் புரியுது” என தற்போதைய சூழலோடு ஒப்பிட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *