சிம்பு 51 படம் எப்போது ?
வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்து வரும் சிம்பு கைவசமாக தேசிங் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம், அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படம் என வைத்துள்ளார். இதில் தேசிங் பெரியசாமி படம் சிம்புவின் 50ஆவது படமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அது குறித்து எந்த தகவலும் தற்போது இல்லாமல் இருக்கிறது. ஆனால் அவரது 51வது படமாக அறிவிக்கப்பட்ட அஷ்வத் மாரிமுத்துவின் படம், தொடர்ந்து அடுத்தக் கட்ட பணிகளில் நகர்ந்து வருகிறது.
சமீபத்தில் பட நாயகியாக மிருணாள் தாகூரை படக்குழு அணுகி வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. அதே போல் இசையமைப்பாளராக அனிருத்தை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்பட்டது. இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்த நிலையில் படத்தின் புதிய தகவல் ஒன்றை இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து பகிர்ந்துள்ளார். சிம்பு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து படப்பிடிப்பிற்கு தயாராகி வருவதாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.