தொடர் தோல்வியால் தனுஷின் சவகாசத்தை முறித்த பிரபல தயாரிப்பு நிறுவனம்!

தொடர் தோல்வியால் தனுஷின் சவகாசத்தை முறித்த பிரபல தயாரிப்பு நிறுவனம்!
  • PublishedMarch 19, 2023

தனுஷின் படத்தை தயாரிக்க ஒரு காலகட்டத்தில் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு இருந்தது. ஆனால் சமீபகாலமாக அவரது படங்கள் தொடர் தோல்வியை தழுவி வருவதால் தனுஷின் படத்தை தயாரிக்க எந்த முன்னணி நிறுவனங்களும் முன் வருவதில்லை.

மேலும் தனுஷ் ஹிட் படங்கள் கொடுத்து வந்த போது பிரபல நிறுவனம் ஒன்று அவரிடம் மூன்று படங்களுக்கு ஒப்பந்தம் செய்து வைத்திருந்தது. இதில் இரண்டு படங்கள் வெளியாகி மிக மோசமான தோல்வி அடைந்த நிலையில் மூன்றாவது படம் இப்போது உருவாகி வருகிறது.

ஆனால் அடுத்த படமும் தனுஷை வைத்து தயாரித்தால் கஜானா காலி ஆகிவிடுமோ என்ற பயத்தில் வேறு ஒரு ஹீரோவை தயாரிப்பு நிறுவனம் புக் செய்துள்ளது. சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் முதலிலேயே சத்யஜோதி பிலிம்ஸ் தனுஷ் உடன் மூன்று படத்திற்கு ஒப்பந்தம் போட்டதால் கேப்டன் மில்லர் படத்தையும் இந்நிறுவனம் தயாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *