படம் தோல்வியடைந்தாலும், மார்க்கெட் குறையவில்லை : எதிர்பார்ப்பில் சிவகார்திகேயன் படம்!
தொலைக்காட்சி பிரபலமாக இருந்து தற்போது முன்னணி நடிகராக வளர்ந்திருப்பவர் சிவகாரத்திகேயன். இவருடைய நடிப்பில் வெளியாகி படங்களில் பெருமளவு நகைச்சுவை இருக்கும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும்.
அதற்கு ஏற்றால் போல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டோக்டர், டான் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்தன. ஆனால் இந்த இரு படங்களை தொடர்ந்து வெளியான பிரின்ஸ் திரைப்படம் தோல்வியை சந்தித்தது. ஆகையால் அவருடைய அடுத்த திரைப்படத்திற்கும் பெருமளவு வரவேற்பு இருக்காது என்ற எண்ணம் அனைவரிடமும் மேலோங்கியிருந்தது.
இருப்பினும் அவை அனைத்தையும் தவிடுபொடியாக்கும் வகையில் தற்போது அவருடைய மாவீரம் திரைப்படம் வியாபார ரீதியாக மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த திரைப்படத்தின் சூட்டிங் விரைவில் முடிவு பெற இருக்கிறது.
ஆரம்பத்திலிருந்தே இந்த படத்தில் பல பிரச்சனைகள் இருந்தாலும் தற்போது அனைத்தும் சுமூகமாகவே முடிந்துள்ளது. மேலும் இப்படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் வியாபாரங்களும் அமோகமாக நடைபெற்று வருகிறதாம்.
முன்னணி நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் பட குழு தற்போது 60 கோடி வரை பிசினஸ் பேசி இருக்கிறார்களாம். இறுதி கட்ட பேச்சு வார்த்தையில் இந்த வியாபாரம் 100 கோடியை தொட்டுவிடும் என்கின்றனர். அந்த வகையில் பிரின்ஸ் திரைப்படத்தின் மோசமான தோல்வி மாவீரன் படத்திற்கு ஒரு தடையாக இல்லை என்றே சொல்ல வேண்டும்.