விஜய்யுடன் மீண்டும் நேருக்கு நேர் மோத திட்டமிடும் அஜித்

விஜய்யுடன் மீண்டும் நேருக்கு நேர் மோத திட்டமிடும் அஜித்
  • PublishedMarch 12, 2023

அஜித் நடிக்கவுள்ள 62வது திரைப்படம் தொடர்பில் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது..

இந்த திரைப்படம் குறித்து அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

ஏகே 62 திரைப்படத்திற்கான அறிவிப்பு, அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக வெளிவர இருக்கிறது. மேலும் லைக்கா ப்ரோடக்சன் தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கும் இந்த திரைப்படம். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளியான தேதி அன்றில் இருந்தே படத்திற்கான ஷூட்டிங் நடத்தப்பட உள்ளதாகவும், திரைப்பட குழுவினர் தயார் நிலையில் இருப்பதாகவும், இயக்குனர் மகிழ் திருமேனி தன்னுடைய சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் திரைப்படத்தை தொடர்ந்து இடைவிடாது இயக்க விரும்பதாகவும், சென்னையில் மட்டும் பத்து நாட்கள் தொடர்ந்து சூட்டிங் நடக்க இருப்பதாகவும், முழு படத்திற்கான சூட்டிங் விரைவில் எடுத்து முடிக்கப்படும் என்றும், ஏற்கனவே படத்தின் இயக்குனர் மாற்றப்பட்டு படம் நீண்ட நாட்கள் இழுபறியில் உள்ளதாகவும், அதனால் மேலும் காலதாமதம் ஆகாமல் படத்தை விரைவில் எடுத்து முடிக்க வேண்டும் என்று அஜித் விருப்பப்படுவதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் விஜய் நடிக்கும் லியோ பட சூட்டிங் படு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் விரைவில் மே மாதத்திற்குள் படம் சூட்டிங் முடிந்து அடுத்த கட்ட வேலைகளில் ஈடுபட இருப்பதாகவும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

மேலும் அஜித் மற்றும் விஜய் நடித்த துணிவு வாரிசு திரைப்படங்கள் ஜனவரி மாதம் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த திரைப்படங்கள் வெளியான போது ரசிகர்களுடைய பெரும் வரவேற்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும், அஜித் நடித்த துணிவு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாகவும், அதனால் மீண்டும் விஜய் நடிக்கும் லியோ படத்தின் மூலம் அஜித் ஏ கே 62 படமும் மீண்டும் போட்டி போட அஜித் ஆசைப்படுவதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனை அறிந்த படக்குழுவினர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் தற்சமயம் பட சூட்டிங் ஆரம்பித்தால் விரைவில் முடித்து விடலாமா என்று தீவிர ஆலோசனை ஈடுபட்டு இருப்பதாகவும் கூறுகின்றனர். இந்த இரண்டு படங்களும் எந்த அளவில் நேருக்கு நேர் மோத போகின்றன என தெரியவில்லை. ஆனால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இடையே இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *