வேர்ல்ட் டூரை தள்ளி வைத்த அஜித் : லியோ காட்டிய பயத்தால் விரைவில் வெளிவர உள்ள ஏகே 62 அப்டேட்!

வேர்ல்ட் டூரை தள்ளி வைத்த அஜித் : லியோ காட்டிய பயத்தால் விரைவில் வெளிவர உள்ள ஏகே 62 அப்டேட்!
  • PublishedMarch 3, 2023

நடிகர் அஜித் ஏகே62 படத்திற்காக வேர்ல்டு டூரை தள்ளி வைத்துள்ளார்.
அஜித்தின் ஏகே 62 படத்தை மகிழ்திருமேனி தான் இயக்கப் போகிறார் என்பது உறுதியானாலும் அதற்கான அறிவிப்பு மட்டும் இழுத்தடித்து வருகிறது.
இப்போது மகிழ்திருமேனி தனக்கு தெரிந்த இயக்குனர்களிடம் கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறாராம். இதற்காக 5 ஸ்டார் ஹோட்டலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆனால் படக்குழு மிகப்பெரிய குழப்பத்தில் இருந்து வந்தனர்.
ஏனென்றால் அஜித் ஒரு படம் முடிந்த உடனே சுற்றுப்பயணம் மேற்கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். அதுமட்டுமின்றி ஏகே 62 படத்தை முடித்த கையோடு பைக்கில் வேர்ல்ட் டூர் செல்ல உள்ளார்.
இதனால் படக்குழு குறித்த நேரத்தில் எப்படி படத்தை எடுத்து முடிப்பது என்ற யோசனையில் இருந்து வந்தனர். ஆனால் அஜித் படக்குழுவுக்கு ஒரு குட் நியூஸ் சொல்லி உள்ளார். அதாவது படத்தை நன்றாக எடுங்கள் நான் பிறகு வேர்ல்ட் டூர் செல்கிறேன.; அதனால் இப்போது பயப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனால் மகிழ்திருமேனி மிகுந்த மகிழ்ச்சி உடன் மற்ற வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கி விட்டாராம். அதுமட்டுமின்றி லோகேஷ், விஜய் கூட்டணியில் உருவாகி வரும் லியோ படத்தின் ப்ரோமோ வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அந்த பயத்தினால் அஜித் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கலாம் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.
இதற்கிடையே லியோ படம் போலவே ஏகே 62 படத்திற்கும் டைட்டில் வீடியோவை வெளியிடலாம் என்று யோசனை கூறியுள்ளாராம். இதற்கான ஏற்பாடை தற்போது மகிழ்திருமேனி செய்து வருகிறாராம். மேலும் இன்னும் தாமதிக்காமல் விரைவில் படத்தின் அப்டேட் வெளியிடலாம் என்றும் அஜித் கூறியுள்ளாராம். ஆகவே படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *