உலக நாயகன், சூப்பர் ஸ்டார்ட் இணையும் படம் – புதிய அப்டேட்.
தமிழ் திரை உலகில் இரு பெரும் ஜாம்பவான்களாக அறியப்படுபவர்கள் தான் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். இவர்கள் இருவரும் ஆரம்ப காலகட்டத்தில் ஒன்றாக இணைந்து நடித்திருந்தாலும் கடந்த 45 ஆண்டுகளாக ஒரு படத்தில் கூட இணைந்து நடிக்காமல் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கும் படம் குறித்த தகவல்கள். எதிர்பார்பை அதிகப்படுகின்றன. இந்நிலையில் அப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி இருக்கிறது. அப்படத்தை ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தை படத்தை இயக்கப் போவது யார் என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக இருந்தது. அதற்கான விடை தற்போது கிடைத்திருக்கிறது. அதன்படி ரஜினியை வைத்து ஜெயிலர் என்கிற மாஸ் ஹிட் படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் தான் இந்த பிரம்மாண்ட படத்தை இயக்க உள்ளாராம்.
இப்படத்தின் அறிவிப்பு வீடியோவையும் தயார் செய்திருக்கிறது படக்குழு. அதில் ரஜினி கமல் இருவரும் விண்டேஜ் கார் ஒன்றில் ஒன்றாக வலம் வருவது போன்ற காட்சிகள் இடம் பெற உள்ளன. மேலும் இப்படத்திற்கு அனிருத் தான் இசையமைக்க உள்ளாராம்.
இந்நிலையில் இந்தப் படத்தின் அறிவிப்பு வீடியோ நாளை நண்பகல் 12.07 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.