மாஸாக களமிறங்கிய ராகிங் ஸ்டார்.
இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில், யஷ் நடிக்கும் ‘டாக்சிக்’ (Toxic) திரைப்படத்தின் இரண்டாவது டீசர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகிக்கொண்டு இருக்கிறது.
கே.ஜி.எப்-ன் ‘ராக்கி பாய்’ கதாபாத்திரத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட, ஆனால் அதே சமயம் மிரட்டலான ஒரு ஆக்ஷன் அவதாரத்தில் யஷ் மீண்டும் களம் கண்டுள்ளார்.
Toxic என்ற தலைப்பிற்கு ஏற்ப, இந்தப் படம் ஒரு தீவிரமான கேங்ஸ்டர் டிராமா (Gangster Drama) என்பதை டீசர் உறுதிப்படுத்துகிறது. ரத்தம் தெறிக்கும் சண்டைக்காட்சிகள், யஷின் அந்தத் தனித்துவமான மேனரிசம் மற்றும் மிரட்டலான பின்னணி இசை என அனைத்தும் சேர்ந்து ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய ‘விஷுவல் ட்ரீட்’ ஆக அமைந்துள்ளது.
யஷின் 40-வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட முதல் டீசரே மிகப்பெரிய விவாதங்களைக் கிளப்பிய நிலையில், தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.
யஷிற்கு இணையாகப் படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, பாலிவுட் நடிகை கியாரா அத்வானி, ஹுமா குரேஷி , மற்றும் ருக்மணி வசந்த் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.